தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் வாசகர் வட்ட தகவலை பார்த்து நுாலகத்திற்கு வந்தேன்: போலீஸ்காரர் பெருமிதம்

தினமலர் வாசகர் வட்ட தகவலை பார்த்து நுாலகத்திற்கு வந்தேன்: போலீஸ்காரர் பெருமிதம்

தினமலர் வாசகர் வட்ட தகவலை பார்த்து நுாலகத்திற்கு வந்தேன்: போலீஸ்காரர் பெருமிதம்


UPDATED : பிப் 28, 2026 02:30 PM

ADDED : பிப் 28, 2026 02:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 28, 2026 02:30 PM ADDED : பிப் 28, 2026 02:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
தினமலர் வாசகர் வட்ட தகவலை பார்த்து, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு வந்ததாக, ரயில்வேயில் போலீஸ் ஏட்டாக பணியாற்றுபவர் பெருமிதத்துடன் கூறினார்.

பெங்களூரு தினமலர் அலுவலகத்தின், கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, பெங்களூரு மத்திகெரேயில் வசிப்பவரும், ஆந்திராவில் ரயில்வே போலீசில் ஏட்டுவாக பணியாற்றும் தேவேந்திரன், 50 நேற்று வந்தார்.

அந்துமணியின் பா.கே.ப., புத்தகங்கள், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட 'என் மண், என் மக்கள்' பாத யாத்திரை தொடர்பான, 'உங்களில் ஒருவன்' புத்தகத்தை ஆர்வமாக படித்தார்.

வாட்ஸாப் குழு

பின், அவர் கூறியதாவது:
பல ஆண்டுகளாக 'தினமலர்' நாளிதழ் படிக்கிறேன். பெங்களூரு தினமலர் வாசகர் வட்டம் 'வாட்ஸாப்' குழுவில் நானும் உள்ளேன். நுாலகம் தொடர்பான செய்தியை அதில் தான் படித்தேன். தற்போது 10 நாட்கள் விடுமுறையில் வந்ததால், நுாலகத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் வந்து விட்டேன். நுாலகத்தின் கட்டமைப்பு அருமையாக உள்ளது. நிறைய புத்தகங்கள் இங்கு குவிந்து உள்ளன.
ஆன்மிகம், வரலாறு, கிரைம், கன்னடம், குழந்தைகளை கவரும் புத்தகங்களின் தொகுப்பு சூப்பராக உள்ளது. புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்று, படிக்கும் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும். புத்தகங்களை படித்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வது, வாழ்க்கையை கட்டமைக்க உதவியாக இருக்கும். இந்நுாலகத்தை தமிழர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

காலணியை கழற்றி... மல்லேஸ்வரத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற டி.வி.எஸ்., சுந்தரம் மோட்டார்ஸ் ஊழியர் ராமதுரை, 72, நேற்று நுாலகத்திற்கு வந்தார். நுாலகத்திற்கு நுழைவதற்குள், தான் அணிந்து வந்திருந்த காலணியை கழற்றிவிட்டு கை கூப்பி வணங்கியவாறு, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாறு உட்பட 36 புத்தகங்களை, நுாலகத்திற்கு அன்பளிப்பாக கொடுத்து மகிழ்ந்தார். அந்துமணி பதில்கள், ஆன்மிக புத்தகங்களை எடுத்து ஆர்வமாக படித்தார்.

அவர் கூறியதாவது:


பெங்களூரில் தமிழ் புத்தகங்களாக நிறைய கொட்டி கிடக்கும், நுாலகம் இல்லையே என்ற ஏக்கம் இப்போது தணிந்துவிட்டது. அந்துமணி பதில்கள் புத்தகம் சூப்பரோ சூப்பர். தமிழ் புத்தகங்கள் மட்டுமின்றி ஆங்கிலம், கன்னட புத்தகங்களும் இருப்பது கூடுதல் சிறப்பு. நுாலகம் தமிழர்களுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருக்கும். இன்னும் உங்களுக்கு நிறைய புத்தகங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

நுாலகத்தை இன்னும் விரிவுபடுத்தினாலும் நன்றாக இருக்கும். தமிழ் வாசிப்பு தாகத்தை தீர்க்கும் இடமாக, இந்த நுாலகம் மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. மெம்பர்ஷிப் முறையை அமல்படுத்தினால், இங்கு வருவோருக்கு பலன் அளிக்கும். இதே கருத்தில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நுாலகம் தொடர்புக்கு: 93615 00327; 89715 09091

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us