UPDATED : ஜூன் 30, 2025 12:00 AM
ADDED : ஜூன் 30, 2025 08:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை :
மத அடையாளத்தை வைத்து சிலர் அரசியல் செய்யப் பார்க்கின்றனர் என அன்பில் மகேஷ் கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
பள்ளிகளில் மதம் சார்ந்த அடையாளங்கள் இருப்பதால், சில நேரங்களில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை கூட ஏற்படுகிறது. இதனால்தான், மாணவர்கள் மத அடையாளங்களோடு பள்ளிக்கு வருவது கூடாது என, சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
உடனே, இதை வைத்து சிலர் அரசியல் செய்யப் பார்க்கின்றனர். மதத்தின் மீதான நம்பிக்கையில், யாரும் தலையிடப் போவதில்லை.
இருந்தபோதும், நீட் தேர்வு எழுத வரும்போது, தாலிச்செயினை கூட கழற்றி வைத்துவிட்டு வர வேண்டுமென கூறுகின்றனர். ஆனால், தமிழக அரசு மதச்சார்பின்மையோடு எந்த காரியம் செய்தாலும், அதை விமர்சிக்க வந்து விடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.