sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாசில்லா அருப்புக்கோட்டை: குளு குளு சூழலில் கல்லூரி வளாகம்

/

மாசில்லா அருப்புக்கோட்டை: குளு குளு சூழலில் கல்லூரி வளாகம்

மாசில்லா அருப்புக்கோட்டை: குளு குளு சூழலில் கல்லூரி வளாகம்

மாசில்லா அருப்புக்கோட்டை: குளு குளு சூழலில் கல்லூரி வளாகம்


UPDATED : ஆக 22, 2024 12:00 AM

ADDED : ஆக 22, 2024 09:00 AM

Google News

UPDATED : ஆக 22, 2024 12:00 AM ADDED : ஆக 22, 2024 09:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை:
மரங்கள் இல்லாத உலகமே இல்லை. அத்தியாவசியமான உயிரினங்களில் ஒன்று. மனிதர்களுக்காகவும், பிற உயிரினங்களுக்காகவும் பல்வேறு விதமான நன்மைகளை செய்து கொண்டிருக்கிறது. மனித வாழ்க்கையில் பல்வேறு விதமான வழிகளில் மரங்கள் முக்கியத்துவம் வகிக்கின்றன.

மனிதர்கள் மரங்களைச் சார்ந்து உள்ளனர். மரங்கள் நம்மை சுற்றி இருக்கிறது. மன அமைதி கிடைக்கிறது. ஓய்வு எடுக்க நிழல் தருகிறது. பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் மரங்கள் முக்கியம். அவை இல்லை என்றால் உலகில் வாழ்வது கடினம். வருங்கால சந்ததியினருக்கு பசுமையான உலகத்தை வழங்குவதற்கு மரங்களை நாம் காப்பாற்ற வேண்டும். அதிகமாக வளர்க்க வேண்டும்.

நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்து உண்ணும் உணவு வரை மரங்களில் இருந்து பெறுகிறோம். இன்றைக்கு மரங்களை அதிகமாக வெட்டி சாய்த்ததால் தான் சுனாமி, நிலநடுக்கம், புயல், வெள்ளம், வறட்சி, அதிக வெப்பமயமாதல் போன்றவை உருவாகிறது. இவற்றிற்கு காரணம் இயற்கை பேரிடர்கள் அல்ல.

அதிக அளவில் மரங்களை வெட்டிய மனிதர்கள் தான் காரணம். ஒவ்வொருவர் வீட்டிலும் மரக்கன்றுகளை கட்டாயம் வளர்க்க வேண்டும். அதற்கான வசதி இல்லாதவர்கள் ஒன்றாக இணைந்து வீட்டின் அருகில் உள்ள பொது இடங்கள், பள்ளி வளாகங்கள், குடியிருப்புகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கலாம். மரங்களை வளர்ப்பது நம் அடிப்படை கடமைகளில் ஒன்று.

யார் யாரெல்லாம் சுவாசிக்கின்றனரோ அவர்கள் எல்லாம் மரங்களை நட வேண்டும் என்ற நிலை இன்றைய சூழலில் உள்ளது. அந்த வகையில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியில் வளாகம் முழுவதும் 900க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரங்களை வளர்த்து குளு குளு சூழலை ஏற்படுத்தி உள்ளனர்.

இலுப்பை, மகிழம், புங்கை, நாகலிங்கம், ஆச்சா, சிகடு, செம்மயில் கொன்றை, நீர்க்கடம்பு, அரச மரம், கலாக மரம், வசந்தவல்லி, மருதமரம் அத்தி, மஞ்சனத்தி, ஈழத்தலரி, ராஜஸ்தான் தேக்கு உட்பட பலவித ரக மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். மரங்களின் பெயர் அதன் பயன்கள் குறித்து ஒவ்வொரு மரத்திலும் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இயற்கையை பாதுகாப்பது அவசியம்


எங்கள் கல்வி குழுமத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் மரங்கள் வளர்ப்பின் அவசியத்தை மாணவ மாணவியர்கள் உணர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு மரக்கன்றுகளை வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளோம். இயற்கையான சூழல் பள்ளி கல்லுாரி வளாகங்களில் இருந்தால்தான் மாணவர்கள் அமைதியான சூழலில் ஆர்வமாக படிக்க முடியும்.- சுதாகர், எஸ்.பி.கே., கல்வி குழும தலைவர்.

மரக்கன்றுகள் நடுவது கட்டாயம்



எங்கள் எஸ்.பி.கே., கல்லூரி வளாகத்தில் 900க்கு மேற்பட்ட பலவித ரகங்களை சேர்ந்த பயனுள்ள மரங்களை பல ஆண்டுகளாக வளர்த்து பராமரித்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி விழாக்களில் மரக்கன்றுகள் நடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவியர்களுக்கு மரங்கள் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்தி, அவர்கள் மூலமாக மரக்கன்றுகளை வளர்த்து பாதுகாக்கின்றோம்.- சங்கர சேகரன், கல்லுாரி செயலாளர்.






      Dinamalar
      Follow us