sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடிகை லிஜோமோல் ஜோஸிற்கு பாராட்டு

/

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடிகை லிஜோமோல் ஜோஸிற்கு பாராட்டு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடிகை லிஜோமோல் ஜோஸிற்கு பாராட்டு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடிகை லிஜோமோல் ஜோஸிற்கு பாராட்டு


UPDATED : பிப் 18, 2026 03:13 PM

ADDED : பிப் 18, 2026 03:15 PM

Google News

UPDATED : பிப் 18, 2026 03:13 PM ADDED : பிப் 18, 2026 03:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

​புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழக நுாலக மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது.

நிகழ்ச்சியை பல்கலைக் கழகத் துணை வேந்தர் பிரகாஷ் பாபு துவக்கிவைத்து பேசியதாவது:

“ஒரு கல்வி நிறுவனத்தின் உண்மையான துாதுவர்கள் அந்த நிறுவனத்தின் முன்னாள் மாணவர்களே. அவர்களின் வெற்றிப் பயணம், தற்போது பயின்று வரும் மாணவர்களுக்குப் பெரும் ஊக்கத்தைத் தரும்.

இத்தகைய சந்திப்புகள் பழைய மற்றும் புதிய தலைமுறை மாணவர்களிடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கும்,” என்றார்.

​பின் திரைத்துறையில் முத்திரை பதித்து வரும் முன்னாள் மாணவி லிஜோமோல் ஜோஸை பாராட்டிய துணை வேந்தர், அவருக்குப் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

​'ஜெய் பீம்' படத்திற்காக 2021ல் தமிழக அரசின் சிறந்த நடிகை விருது. ​'நடன்ன சம்பவம்' படத்திற்காக 2025ல் கேரள அரசின் சிறந்த குணச்சித்திர நடிகை விருது ஆகியவற்றைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு அவர் பெருமை சேர்த்துள்ளதை துணைவேந்தர் பாராட்டினர்.

​தொடர்ந்து துறையின் ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'ஆலோகா' எனும் புதிய ஆராய்ச்சி மன்றத்தை துணை வேந்தர் துவக்கி வைத்தார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us