UPDATED : ஜூன் 22, 2024 12:00 AM
ADDED : ஜூன் 22, 2024 11:36 AM

ஈரோடு:
ஈரோடு தலைமை அஞ்சலகம் சார்பில், சிறுசேமிப்பு கணக்கு துவக்கம் மற்றும் ஆதார் முகாம், ஈரோடு இடையன்காட்டுவலசு மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் அமுதா வரவேற்றார்.
பள்ளி குழந்தைகள், அவர்களது பெற்றோருக்கு புதிய அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்கி, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் கூறியதாவது:
அஞ்சலக சிறு சேமிப்பு கணக்கு, அனைத்து குழந்தைகளுக்கும் அவசியமானது. மாணவர்கள், தங்களது அஞ்சல் திட்ட கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம், அரசின் உதவித்தொகை, மானியம் அஞ்சல் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
அஞ்சல் துறை இந்தியன் போஸ்டல் பேமென்ட் பாங்க் மூலம், 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு செலுத்தி இருந்த சுந்தரம் கொழந்தன் என்பவர் விபத்தில் இறந்துவிட்டார். அவரது வாரிசான சிவசக்திவேலனுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு தொகைக்கான காசோலை வழங்கப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.
முகாமில், 50க்கும் மேற்பட்டோருக்கு சிறுசேமிப்பு கணக்கு துவங்கப்பட்டது.