UPDATED : பிப் 18, 2025 12:00 AM
ADDED : பிப் 18, 2025 06:34 PM

திருச்சி:
திருச்சி என்.ஐ.டி-ல் ஆண்டுதோறும் ப்ரக்யான் தொழில்நுட்ப மேலாண்மை விழா நடத்தப்பட்டு வருகிறது.
இதன் 21ம் பதிப்பின் மையப் பொருளாக பனோப்டிகா பிரேக் தி கோட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இரண்டு நாள் நிகழ்வாக நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப் படுத்துவார்கள். என்.ஐ.டி.ஆல் நடத்தப்படும் இன்ஜீனியம் எனும் தேசிய அளவிலான போட்டியில் சமூகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான பல துறைகள் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மேலாண்மை, மென்பொருள், வன்பொருள், ரோபோடிக்ஸ், பட்டறைகள், விருந்தினர் சொற்பொழிவுகள், விவாதங்கள் ஆகிய நிகழ்வுகள் ஒருங்கிணைந்த விழாவாக பிரக்யான் கொண்டாடப்படுகிறது. பிரக்யானின் ஒரு பகுதியாக மாணவர்களால் பிரக்யான் வலைபதிவு, பிரக்யான் பாட்காஸ்ட் போன்ற வெளியீடுகள் தயாரிக்கப்படுகின்றன. விழாவின் நிறைவாக ஒலி, ஒளி காட்சிகள், வான்வழி சாகசங்கள் என பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெறுகின்றன.

