UPDATED : ஜூலை 29, 2025 12:00 AM
ADDED : ஜூலை 29, 2025 05:13 PM

புதுடில்லி:
பிரளய் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சாதனை படைத்துள்ளது.
ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து, பிரளய் (PRALAY) ஏவுகணையின் இரண்டு தொடர்ச்சியான விமான சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி, டிஆர்டிஓ சாதனை படைத்துள்ளது.
பிரளய் ஏவுகணை (PRALAY) என்பது போர்க்கள பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.
இது, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பல மேம்பட்ட அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
* 150 முதல் 500 கிமீ வரை சென்று துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
* இந்த ஏவுகணை 350 முதல் 700 கிலோகிராம் எடை கொண்டது. எதிரி இலக்குகளை வீரியமாக தாக்கும் சக்தி உடையது.
* இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது பாதுகாப்பு துறைக்கு மிக முக்கிய மைல்கல் என கருதப்படுகிறது.