sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

காலமுறை ஊதியம் கோரி முன்பருவக்கல்வி ஆசிரியர்கள் மனு

/

காலமுறை ஊதியம் கோரி முன்பருவக்கல்வி ஆசிரியர்கள் மனு

காலமுறை ஊதியம் கோரி முன்பருவக்கல்வி ஆசிரியர்கள் மனு

காலமுறை ஊதியம் கோரி முன்பருவக்கல்வி ஆசிரியர்கள் மனு


UPDATED : பிப் 17, 2026 02:05 PM

ADDED : பிப் 17, 2026 02:08 PM

Google News

UPDATED : பிப் 17, 2026 02:05 PM ADDED : பிப் 17, 2026 02:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி, தமிழ்நாடு முன்பருவக்கல்வி ஆசிரியர்கள் நலச்சங்கத்தினர், மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமையில், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கடந்த, 2022 - 23ம் கல்வியாண்டில், தமிழகம் முழுவதும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள, 2,381 அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் தமிழகரசால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. தற்காலிக தொகுப்பூதிய முன்பருவக்கல்வி ஆசிரியர்களின் பணி நியமனம், பள்ளி மேலாண்மை குழுவால் ஏற்படுத்தப்பட்டது. அதை நீக்கி பள்ளிக் கல்வித்துறை மூலமாக நியமனம் வழங்க வேண்டும்.

தற்போதைய நிலையில், 5,000 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. முன்பருவக்கல்வி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலமுறை அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

மாத சம்பளத்தை, நேரடியாக எங்களது வங்கி கணக்கிற்கே வரவு வைக்க வேண்டும். மே மாதம் விடுமுறையிலும் ஊதியம் வழங்க வேண்டும். பணி நீட்டிப்பு ஆணையை ஆண்டுதோறும் மாற்றியமைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us