தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுண்ணுயிர் ஆராய்ச்சி பன்னாட்டு கருத்தரங்கம்

நுண்ணுயிர் ஆராய்ச்சி பன்னாட்டு கருத்தரங்கம்

நுண்ணுயிர் ஆராய்ச்சி பன்னாட்டு கருத்தரங்கம்


UPDATED : பிப் 17, 2026 02:08 PM

ADDED : பிப் 17, 2026 02:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2026 02:08 PM ADDED : பிப் 17, 2026 02:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லுாரியில் நுண்ணுயிர் எதிர்ப்பு, நுண்ணுயிர் படலத்திற்கு எதிரான ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றங்கள் எனும் தலைப்பில் இருநாள் கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கண்ணப்பன் வரவேற்றார். தமிழ்நாடு தடயவியல் துறை முன்னாள் இயக்குநர் மகாலெட்சுமி துவங்கி வைத்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அழகப்பா பல்கலை உயிரி தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் கருத்தபாண்டியன், நுண்ணுயிரிகளின் தாக்கம், எதிர்ப்பு மருந்து, தயாரிப்பு முறை, நன்மை தீமை குறித்து பேசினார்.
இதில் சீனா, அமெரிக்கா, தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் கட்டுரைகள் வழங்கினர்.

நிகழ்வில் கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாத்திமா சானாஸ் பரூக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us