தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெரியார் பல்கலையில் செனட் உறுப்பினர்கள் 8 பேர் தேர்வு

பெரியார் பல்கலையில் செனட் உறுப்பினர்கள் 8 பேர் தேர்வு

பெரியார் பல்கலையில் செனட் உறுப்பினர்கள் 8 பேர் தேர்வு


UPDATED : பிப் 17, 2026 02:10 PM

ADDED : பிப் 17, 2026 02:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2026 02:10 PM ADDED : பிப் 17, 2026 02:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்:
பெரியார் பல்கலையில் புதிதாக, 8 பேர் ஆட்சிப்பேரவை (செனட்) உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலை சாசன விதிகளின் படி, பல்கலை ஆளுகைக்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் வசிக்கும் பட்டம் பெற்ற மாணவர்கள், பல்கலை ஆட்சிப்பேரவையில் (செனட்) இடம் பெறுவர்.

பட்டதாரிகளின் பதிவின் வாயிலாக, பட்டதாரி தொகுதி தேர்தல் மூலம் மாவட்டத்துக்கு இருவர் வீதம், ஆட்சிப்பேரவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் பட்டதாரிகள் மூன்று ஆண்டுகள் ஆட்சிப்பேரவை உறுப்பினர்களாக செயல்படுவர்.

அதன் விபரம்:
சேலம் ஓமலுாரை சேர்ந்த முத்துக்குமார், சேலம் முல்லை நகரை சேர்ந்த மணிகண்டன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த செல்வகுமார், ராசிபுரத்தை சேர்ந்த ராஜேஸ், தர்மபுரியை சேர்ந்த சிவகலை மற்றும் ராம்குமார், கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியை சேர்ந்த விவேகானந்தன், பர்கூரை சேரந்த தமிழரசன் ஆகியோர், புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு நேற்று நியமன ஆணை பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us