கவுரிவாக்கம் பிரின்ஸ் கல்லுாரியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்
கவுரிவாக்கம் பிரின்ஸ் கல்லுாரியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்
UPDATED : ஜன 11, 2026 01:59 PM
ADDED : ஜன 11, 2026 02:01 PM

சென்னை: சென்னை, கவுரிவாக்கம், பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 31ம் ஆண்டு துவக்கம், திருவள்ளுவர் சிலை திறப்பு மற்றும் பொங்கல் விழா ஆகியவை இணைத்து, முப்பெரும் விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பேசியதாவது:
நாளைய உலகை ஆளப்போவது பெண்கள்தான். அடுத்த சில ஆண்டுகளில், நம் நாட்டின் தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் வரப்போகிறார். உலகம் முழுதும் வைக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலையால், தமிழுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு வி.ஜி.சந்தோசம் ஒரு காரணம். கல்வி வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
பொங்கல் விழாவை துவக்கி, வி.ஜி.பி., உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் பேசியதாவது:
உலகில் மிகச்சிறந்த நாடு இந்தியா. நம் மக்கள், உழைப்பிற்கு உதாரணமானவர்கள். தாயை நம் ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும்.
ஒரு தாய்க்கு செய்யும் பணி, பிற்காலத்தில் அவர் மனம் நோகாமல், வாழ வைப்பதுதான். எனவே, அருமை தெரிந்த பிள்ளைகள், தாயை மறக்கமாட்டார்கள். குறளை படித்தால் நெறியோடு வாழ முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரின்ஸ் கல்விக் குழும தலைவர் டாக்டர் வாசுதேவன், விருந்தினர்களை கவுரவித்து பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்விக் குழும துணைத் தலைவர் பிரசன்ன வெங்கடேஷ் செய்திருந்தார். கல்லுாரி முதல்வர் கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

