தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரும் 22ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 22ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 22ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : மே 20, 2026 10:35 AM

ADDED : மே 20, 2026 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2026 10:35 AM ADDED : மே 20, 2026 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
செங்கல்பட்டில், தனியார் வேலைவாய்ப்பு முகாம், வரும் 22ம் தேதி, நடக்கிறது.

இது குறித்து, கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உள்ளன.

இங்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வரும் 22ம் தேதி காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில், 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள், 5,000 பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்துகிறது.

மேலும் விபரங்களுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். இதில், 8 மற்றும் 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு பி.இ., ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா முடித்தோர் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, 044 - 27426020; 9499055895 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us