சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை துவக்கம்
சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை துவக்கம்
UPDATED : மே 20, 2026 10:35 AM
ADDED : மே 20, 2026 10:37 AM
சங்கராபுரம்:
சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை துவங்கி நடந்து வருகிறது.
ஐ.டி.ஐ., முதல்வர் சுடர்விழி செய்திக்குறிப்பு:
சங்கராபுரம் பூட்டை ரோட்டில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்தை துவங்கியுள்ளது. வேலை வாய்ப்பு பயிற்சித் துறையின் மூலம் செயல்படும் இந்த அரசு ஐ.டி.ஐ.,யில் 100 சதவீத வேலை வாய்ப்பு உறுதியுடன் கூடிய கம்மியர், மோட்டார் வண்டி, கம்பியாள், பொருத்துனர், மின்சார பணியாளர், சி.என்.சி., டெக்னீசியன், மெக்கானிக்கல் எலக்ட்ரிக் வெஹிக்கல் ஆகிய 2 ஆண்டு தொழிற்பிரிவுகள் உள்ளன.
கம்மியர் டீசல், கப்பல் இயந்திர பொருத்துநர், இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் தொழிற்பிரிவுகள் என ஒரு ஆண்டு கால தொழிற்பிரிவுகள் உள்ளன. கம்மியாள் பிரிவுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும், மற்ற அனைத்திற்கும் 10ம் வகுப்பு தேர்ச்சியும் தேவையான கல்வித்தகுதி ஆகும்.
இதில் சேர்க்கை பெற மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ஜாதி சான்று, வருமானச் சான்று, 4 போட்டோ, வங்கி பாஸ்புக், இ மெயில் முகவரி, தொலைபேசி எண் ஆகிய ஆவணங்கள் தேவை.
மேலும் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு மாதம் தோறும் 750 ரூபாய் உதவித்தொகை, மிதிவண்டி, ஒரு செட் காலணி, தையற் கூலியுடன் 2 செட் சீருடை, பாட புத்தகங்கள், வரை கருவிகள், பஸ் பாஸ், தமிழ் புதல்வன் அல்லது புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை, லேப்டாப் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
