UPDATED : ஆக 30, 2026 07:03 PM
ADDED : ஆக 30, 2026 07:04 PM
திருக்கனுார்:
வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார்.
1 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கும், பள்ளி அளவிலான தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் ரேணு நன்றி கூறினார். ஆசிரியர்கள் ஸ்ரீமதி, விஷ்வ பிரியா தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, நித்திலவல்லி, ப்ளோரன்சியா, சுகந்தி, பூவிழி, சங்கரி, ஓம் சாந்தி, சுஜாதா, மகேஸ்வரி, ஆஷா, நந்தினி, அகல்யா, சுமதி, நிஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
