UPDATED : ஜூன் 25, 2026 02:45 PM
ADDED : ஜூன் 25, 2026 02:46 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி, 'பிங்கி லைப் ஸ்டைல்' சார்பில், பள்ளிகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில், 10 பள்ளிகளில் இருந்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, 21 மாணவர்களுக்கு பொள்ளாச்சி 'பிங்கி லைப் ஸ்டைல்' சார்பில், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினரையும் நிறுவனம் சார்பில் கவுரவித்தனர்.
