UPDATED : ஏப் 24, 2024 12:00 AM
ADDED : ஏப் 24, 2024 10:14 AM
புதுச்சேரி:
குடிமைப்பணிகள் தினத்தையொட்டி, இந்திய பொது நிர்வாக நிறுவனம் புதுச்சேரி கிளை சார்பில் நடந்த, பல்வேறு போட்டி யில் வென்ற மாணவர்களுக்கு டி.ஐ.ஜி., பிரிஜேந்திர குமார் பரிசுகள் வழங்கினார்.
புதுச்சேரியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில், குடிமைப்பணிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கிளையின், பொருளாளர் ஆஷா வரவேற்றார்.
அதன் தலைவர் தனபால் பேசுகையில், கடந்த ஆண்டு, பிளஸ் 1, பிளஸ் 2 பள்ளி படிப்பு மற்றும் பட்டப்படிப்புடன் யு.பி.எஸ்.சி., - ஐ.ஏ.எஸ்., பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிற்சி பெறும் மாணவர்கள் அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம், என தெரிவித்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் சாருமதி, 'இந்த ஆண்டு முதல், பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு யு.பி.எஸ்.சி., ஐ.ஏ.எஸ்., பயிற்சி அளிக்கப்படுகிறது' என்றார்.
இந்த ஆண்டு இந்திய பொது நிர்வாக நிறுவனம் (ஐ.ஐ.பி.ஏ.) சிறந்த அதிகாரிகளுக்கான, விருதுகளை, புதுச்சேரி அரசு துணை செயலாளர் சுந்தராஜன், புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஆறுமுகம் ஆகியோருக்கு டி.ஐ.ஜி., பிரிஜேந்திரகுமார் வழங்கினார்.
தொடர்ந்து, குடிமைப்பணி தினத்தையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வென்ற கல்லுாரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.