மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் திருக்குறள் புத்தகம் வழங்கி விழிப்புணர்வு
மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் திருக்குறள் புத்தகம் வழங்கி விழிப்புணர்வு
UPDATED : மே 30, 2026 09:56 AM
ADDED : மே 30, 2026 09:58 AM
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே உள்ள நல்லாம்பட்டி கிராமத்தில், தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது.
பயிற்சி முகாமில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், மல்லர் கம்பம், கோலாட்டம், உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
பயிற்சியின் சிறப்பு நிகழ்வுகளாக, கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பல்வேல் திரையன் மூலம் வழங்கப்பட்டு களப்பயணமும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து முதலுதவி சார்ந்து மருத்துவர்கள் முனிராசு, தரண்குமார், அரவிந்த் பெருமாள் உள்ளிட்ட மருத்துவர்கள் முதலுதவி பயிற்சி வழங்கினர்.
கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நாளில் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், உலக தமிழ் பண்பாட்டு சங்க சிறப்புத் தலைவர் தமிழ் மகன் இளங்கோ மற்றும் மல்லர் கம்ப சங்க கவுரவத்தலைவர் மற்றும் சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி ஆகியோர், மாணவர்களுக்கு திருக்குறள் சார்ந்த அறநெறி கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
