தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டய படிப்பிற்கு உத்தேச தரவரிசை பட்டியல் வெளியீடு

பட்டய படிப்பிற்கு உத்தேச தரவரிசை பட்டியல் வெளியீடு

பட்டய படிப்பிற்கு உத்தேச தரவரிசை பட்டியல் வெளியீடு


UPDATED : ஜூன் 26, 2026 04:34 PM

ADDED : ஜூன் 26, 2026 04:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2026 04:34 PM ADDED : ஜூன் 26, 2026 04:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
பட்டயப் படிப்பிற்கு மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் உத்தேசத் தரவரிசை பட்டியல் அறிவிப்பு பலகையில் வெளிடப்பட்டுள்ளது.

இது குறித்து, லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


புதுச்சேரி அரசு கல்வித் துறையில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2026 - 27ம் ஆண்டிற்கான ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கு (டி.இ.ஐ.இ.டி.,) மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பங்களின் உத்தேச தரவரிசை பட்டியல் பார்வைக்காக மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள விவரங்களில் தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் வரும் 30ம் தேதி மாலை 05:00 மணிக்குள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

தரவரிசைப் பட்டியலில் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையில் மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட உள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us