ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பி.எஸ்.ஜி., மாணவர்கள்
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பி.எஸ்.ஜி., மாணவர்கள்
UPDATED : ஜூன் 27, 2026 11:30 AM
ADDED : ஜூன் 27, 2026 11:35 AM
பீளமேடு:
பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் 1967 - 79ம் ஆண்டு பி.ஏ., கார்ப்பரேட் செகரட்டரிஷிப் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
படித்து முடித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பொன்விழா சந்திப்பு நிகழ்ச்சியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
கல்லுாரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 20க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடி, மாணவப் பருவ நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய தருணங்களை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர். நிறைவில் அனைவரும் ஒன்றாக குழுப் புகைப்படம் எடுத்து, மீண்டும் இதுபோன்ற சந்திப்புகளை தொடர்ந்து நடத்த உறுதியேற்றுக் கொண்டனர்.
பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் ஜெயந்தி, முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
