sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஐரோப்பிய செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட்

/

ஐரோப்பிய செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட்

ஐரோப்பிய செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட்

ஐரோப்பிய செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட்


UPDATED : டிச 05, 2024 12:00 AM

ADDED : டிச 05, 2024 04:45 PM

Google News

UPDATED : டிச 05, 2024 12:00 AM ADDED : டிச 05, 2024 04:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின், புரோபா - 3 செயற்கைக் கோள்களுடன், இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் , வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நம் நாட்டின் செயற்கைக்கோள் மட்டுமின்றி, வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோளையும் விண்ணில் நிறுத்தி வருகிறது. அதன்படி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய, புரோபா - 3 பெயரில் இரு சிறிய செயற்கைக் கோள்களை வடிவமைத்துள்ளது. அவற்றின் எடை, 550 கிலோ. இந்த செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் நேற்று மாலை, 4:08 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.

இதற்கான, 25 மணி நேர, கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் மாலை, 3:08 மணிக்கு துவங்கியது. நேற்று ராக்கெட் ஏவும் பணி, இறுதி கட்டத்தை எட்டியது. திடீரென மாலை, 3:10 மணிக்கு, ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்படுவதாகவும், இன்று மாலை, 4:12 மணிக்கு ஏவப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது. சில மணி நேரங்களுக்கு பின், புரோபா 3 செயற்கைக் கோள்களை சுமந்து, பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட், இன்று மாலை, 4:04 மணிக்கு ஏவப்படும் என, இஸ்ரோ தெரிவித்து இருந்தது.

இதன்படி, சரியாக மாலை 4:04 மணிக்கு புரோபா 3 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.,-சி59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.






      Dinamalar
      Follow us