தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேரளாவில் பொதுத்தேர்வு நிறைவு: மாணவர்கள் உற்சாகம்

கேரளாவில் பொதுத்தேர்வு நிறைவு: மாணவர்கள் உற்சாகம்

கேரளாவில் பொதுத்தேர்வு நிறைவு: மாணவர்கள் உற்சாகம்


UPDATED : மார் 27, 2025 12:00 AM

ADDED : மார் 27, 2025 03:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2025 12:00 AM ADDED : மார் 27, 2025 03:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்காடு:
கேரள மாநிலத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது.

கேரள மாநிலத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த, 3ம் தேதி துவங்கியது. உயர் கல்விக்கு செல்லும் கனவில், படிப்பே கதியென இருந்த மாணவர்களுக்கு, நேற்றுடன் தேர்வு நிறைவடைந்தது.

நேற்று, 10ம் வகுப்புக்கு உயிரியல் தேர்வும், பிளஸ் 2 வகுப்பிற்கு தத்துவம், கணினி அறிவியல், புள்ளிவிவரம், இதழியல் என பல்வேறு பாடங்களின் தேர்வும் நடந்தது. தேர்வு முடிந்ததும், மாணவர்கள் தங்களது சந்தோஷத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு கொண்டாடினர்.

பிளஸ் 1 தேர்வு வரும் 29ம் தேதி நிறைவு பெறுகிறது. 9ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளின் தேர்வு இன்று நிறைவு பெறுகிறது. பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி, ஏப்., 3 முதல் 11ம் தேதி வரையும், 21 முதல் 26ம் தேதி வரையும் இரு கட்டங்களாக நடக்கிறது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, ஏப்., 3ம் தேதி முதல் துவங்கி, 26ம் நடக்கிறது. மே மாதம் மூன்றாம் வாரத்தில் தேர்வு முடிவு அறிவிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us