கருணாநிதி எழுதிய ராமானுஜர் தொடர் நுாலாக்கம் வெளியீடு
கருணாநிதி எழுதிய ராமானுஜர் தொடர் நுாலாக்கம் வெளியீடு
UPDATED : ஜூன் 19, 2024 12:00 AM
ADDED : ஜூன் 19, 2024 09:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
வைணவ சமய முன்னோடியாக திகழ்ந்தவர் ராமானுஜர். இவரது வரலாற்றையும், ஹிந்து மதத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் எடுத்துக்கூறும் விதமாக, ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான் என்ற தொலைக்காட்சி தொடரை, கருணாநிதி எழுதினார்.
இது, 433 அத்தியாயங்களாக ஒளிபரப்பானது. இதை அனைவரும் அறிந்து கொள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப் பிரிவு, ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான் என்ற தலைப்பில் நுாலாக்கம் செய்தது. இந்நுாலை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அறநிலையத்துறை ஆலோசனை குழு உறுப்பினர் சுகி.சிவம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, பல்வேறு ஜீயர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.