UPDATED : மே 21, 2024 12:00 AM
ADDED : மே 21, 2024 02:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு:
இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வு - 2 முடிவு இன்று வெளியாகிறது.
கர்நாடக தேர்வு ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இரண்டாம் ஆண்டு பி,யு.சி., தேர்வு நடந்து, முடிவும் வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக, தேர்வு - 2 நடத்தப்பட்டது. ஏப்ரல் 29 முதல் மே 16 வரை நடந்த தேர்வு முடிவு, இன்று வெளியாக உள்ளது. இம்முறை மூன்றாவது முறை, தேர்வு நடத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தேர்வு முடிவை தெரிந்து கொள்ள, karreselt.nic.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் தங்களின் பதிவு எண்ணை வைத்து முடிவை தெரிந்து கொள்ளலாம்; டவுண்லோட் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.