sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அழகப்பா பல்கலையில் மரங்களை அறிய க்யூ ஆர் கோடு: அசத்தும் தாவரவியல் துறை

/

அழகப்பா பல்கலையில் மரங்களை அறிய க்யூ ஆர் கோடு: அசத்தும் தாவரவியல் துறை

அழகப்பா பல்கலையில் மரங்களை அறிய க்யூ ஆர் கோடு: அசத்தும் தாவரவியல் துறை

அழகப்பா பல்கலையில் மரங்களை அறிய க்யூ ஆர் கோடு: அசத்தும் தாவரவியல் துறை


UPDATED : நவ 02, 2024 12:00 AM

ADDED : நவ 02, 2024 10:45 AM

Google News

UPDATED : நவ 02, 2024 12:00 AM ADDED : நவ 02, 2024 10:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி :
அழகப்பா பல்கலையில் மரங்களின் தகவல் அறிய தாவரவியல் துறை சார்பில் க்யூ ஆர் கோடு அமைக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பு கொண்ட அழகப்பா பல்கலை வளாகத்தில், 45 ஆயிரம் மரங்கள் உள்ளன. இதில் 156 வகையான மரங்கள், செடிகள் காணப்படுகிறது. 2017ம் ஆண்டு மட்டும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

தெரிந்த மரங்களின் பெயர்களைத் தவிர பிற மரங்களின் பெயர்களை நாம் அறிந்து வைத்திருப்பதில்லை. அதனை பூர்த்தி செய்யும் வகையில் காரைக்குடி அழகப்பா பல்கலை வளாகத்தில் மரங்களின் வகைகளை அறிய மற்றும் தாவரவியல் துறை சார்பில் க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யும் போது, மரத்தின் வளர் இடம், வளர் இயல்பு, மருத்துவ குணம் உட்பட அந்த மரத்தின் வரலாற்றையே நாம் அறிய முடியும்.

தாவரவியல் துறையினர் கூறுகையில், தாவரவியல் துறை மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் மரங்கள், செடிகளின் தன்மை அவற்றின் மருத்துவ குணம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதனை பூர்த்தி செய்யும் வகையில் அழகப்பா பல்கலை, அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி, அழகப்பா அறிவியல் வளாகம், அழகப்பா கல்வியியல் வளாகத்தில் உள்ள மரங்களில் க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வளாகங்களில் 45 ஆயிரம் மரங்கள் உள்ளன. அதில் 156 வகையாக மரங்கள், செடிகள் பிரிக்கப்பட்டு க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்டுள்ளது. க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் மரங்களின் வளரிடம், அறிவியல் பெயர், புகைப்படம், வளர் இயல்பு, மருத்துவ குணம், மரங்களின் நீளம், அகலம் உள்ளிட்டவற்றை அறிய முடியும்.

இது மாணவர்களுக்கு மட்டுமின்றி மரம் வளர்ப்போர், சமூக அலுவலர்கள் பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.






      Dinamalar
      Follow us