UPDATED : மார் 09, 2025 12:00 AM
ADDED : மார் 09, 2025 07:49 AM

புதுடில்லி:
ஹிமாச்சல் மாநிலம், சம்பா மாவட்டம், சவுரி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்கிறது. நேற்று முன்தினம் 10ம் வகுப்பிற்கான ஆங்கில தேர்வு நடைபெற்றது.
அப்போது பள்ளியின் தேர்வு கட்டுப்பாட்டாளர், தவறுதலாக பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கில வினாத்தாள் கவரின் சீலை பிரித்து வெளியே எடுத்துவிட்டார்.
இது எக்ஸாம் மித்ரா எனும் செயலியில் வீடியோவாகவும் பதிவாகியது. இதுகுறித்து ஹிமாச்சல் பள்ளிக்கல்வி வாரியத்திற்கு புகார் சென்றது.
அவர்கள் விசாரணை நடத்தி வினாத்தாள் கசிந்ததை உறுதிப்படுத்தினர். இதையடுத்து நேற்று நடக்க வேண்டிய பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கில தேர்வு மாநிலம் முழுதும் ரத்து செய்யப்பட்டது.
புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, பள்ளிக்கல்வி வாரியச் செயலர் அறிவித்துள்ளார்.