sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இன்று மகளிர் தினம்; பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை கையாண்ட சாதனை மகளிர்!

/

இன்று மகளிர் தினம்; பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை கையாண்ட சாதனை மகளிர்!

இன்று மகளிர் தினம்; பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை கையாண்ட சாதனை மகளிர்!

இன்று மகளிர் தினம்; பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை கையாண்ட சாதனை மகளிர்!


UPDATED : மார் 08, 2025 12:00 AM

ADDED : மார் 08, 2025 05:01 PM

Google News

UPDATED : மார் 08, 2025 12:00 AM ADDED : மார் 08, 2025 05:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த பெண்கள், பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை நிர்வகித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சாதனை படைத்த பெண்களுக்கு பிரதமர் மோடியின் சமூக ஊடக பக்கங்களை இன்று (மார்ச் 8) ஒரு நாள் மட்டும் நிர்வகிக்க அனுமதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பெண்களை கவுரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை 2020 முதல் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சர்வதேச மகளிர் தினமான இன்று (மார்ச் 8) சாதனை பெண்கள் 6 பேர் பிரதமர் மோடியின் சமூக வலை தள பக்கங்களை கையாண்டனர். இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (தமிழகத்தைச் சேர்ந்தவர்) தமது பதிவை பிரதமர் மோடி பக்கத்தில் வெளியிட்டார்.

அவர் அதில் கூறியதாவது:
சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கத்தை பயன்படுத்துவது, கையாள்வது மிகவும் த்ரில்லாக இருக்கிறது. செஸ் வீராங்கனையான நான் நாட்டுக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியது பெருமை மிகுந்ததாக உள்ளது.
மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி எலினா மிஷ்ரா, இஸ்ரோ விஞ்ஞானி ஷில்பி சோனி ஆகியோர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: இந்த உலகில் எல்லையில்லாத அறிவியல் தொழில்நுட்பம் உற்சாகமான ஒன்று. மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

நாட்டில் அணுசக்தி மற்றும் விண்வெளித் திட்டத்தில் நம்மை போன்ற பல்வேறு விஞ்ஞானிகள் இருக்கின்றனர். நாட்டில் அறிவியலுக்கு மிகவும் துடிப்பான இடம் இருக்கிறது. எனவே அதிகம் பேர் பின் தொடர நாங்கள் அழைக்கிறோம் என்றனர்.

தனியார் நிறுவன முதன்மை செயல் அதிகாரி அஜைய்தா ஷா பதிவிட்டு உள்ளதாவது: பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற்ற பெண் தன்னம்பிக்கையுடன் முடிவெடுப்பார். சுதந்திரமான சிந்தனையாளராக இருப்பார். தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்துக் கொள்ளும் சிற்பி. நவீன இந்தியாவை உருவாக்குபவர். மகளிர் தினத்தில் பிரதமரின் சமூக வலைதள கணக்கை கையாள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

காளான் வளர்ப்பில் வியத்தகு எழுச்சியை படைத்தவர் அனிதா தேவி. பீகாரைச் சேர்ந்த இவர், பீகாரின் காளான் பெண்மணி என்று அழைக்கப்படுகிறார். 2016ம் ஆண்டு முதல் நிறுவனத்தை நடத்தி 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறார்.

அவர் பிரதமர் வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியதாவது: காளான் உற்பத்தியின் மூலம் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களை சுய முன்னேற்றம் அடைய செய்துள்ளேன். எனது நிறுவனம் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள் உள்ளிட்டவற்றை மலிவான விலையில் வழங்குகிறது. எனது நிறுவனத்தின் மூலம் பெண்கள் சுயமரியாதையான வாழ்க்கையை பெற்றுள்ளனர் என்றார்.

வக்கீல் அஞ்சலி


அகர்வால் தமது பதிவில் கூறி உள்ளதாவது: பிரதமரின் வலைதள பக்கத்தை கையாள எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அடையாளங்களை, தடைகளை மறந்துவிடுங்கள். ஒவ்வொரு பெண்ணும், தனிநபரும் வாழ்க்கையை கண்ணியத்துடன், சுதந்திரத்துடன் வழிநடத்த முடியும் என்பதை உறுதி செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us