வாக்காளர் விழிப்புணர்வு குறித்து கட்டுரை, வினாடி வினா போட்டி
வாக்காளர் விழிப்புணர்வு குறித்து கட்டுரை, வினாடி வினா போட்டி
UPDATED : நவ 20, 2026 03:57 PM
ADDED : நவ 20, 2026 03:58 PM
நாமக்கல்:
இந்திய தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு குறித்து மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் வினாடி வினா போட்டி நாமக்கல்லில் நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மாணவர்களிடையே வாக்காளர் விழிப்புணர்வு, ஜனநாயக கடமை மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் போட்டி நடந்தது.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று, ஓட்டளிப்பதன் அவசியம், தேர்தல் நடைமுறைகள் உள்ளிட்ட தலைப்புகளில், தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் ஆர்.டி.ஓ., பிரபாகரன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வாக்குரிமையின் முக்கியத்துவம் மற்றும் ஜனநாயகத்தில் வாக்காளர்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் பள்ளி ஆசிரியர்கள், தேர்தல் எழுத்தறிவு மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
