குடியரசு தின அணிவகுப்பில் 10வது முறையாக ராமகிருஷ்ணா
குடியரசு தின அணிவகுப்பில் 10வது முறையாக ராமகிருஷ்ணா
UPDATED : டிச 26, 2024 12:00 AM
ADDED : டிச 26, 2024 08:02 AM
கோவை:
நாட்டின் 76வது குடியரசு தினவிழாவில், தலைநகர் டில்லியில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பிற்காக, முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அணிவகுப்பில் பங்கேற்க, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் இரண்டாமாண்டு மாணவி திரிஷா, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, பாரதியார் பல்கலையளவிலும், தொடர்ந்து தென் மாநில அளவில் கர்நாடகாவில் உள்ள தாவங்கரே பல்கலையிலும் நடந்த அணிவகுப்பு தேர்வில் பங்கேற்று, சிறந்த மாணவியாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன்படி, தமிழ்நாடு சார்பில் டில்லி, குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ளார்.
டில்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சியில், ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் தொடர்ந்து, 10வது முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், முதல்வர் சிவக்குமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் ஆகியோரர் மாணவியை வாழ்த்தினர்.