ஆர்.சி., நடுநிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ஆர்.சி., நடுநிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
UPDATED : செப் 14, 2026 12:35 PM
ADDED : செப் 14, 2026 12:38 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
'தினமலர்' நாளிதழ் சார்பில் கல்வி சேவைக்காக மாணவர்களுக்கான பட்டம் இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியாகிறது. இந்த சிறப்பிதழ், மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் விரிவான தகவல்கள் இடம்பெற்று வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டியும் நடத்தி ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ஆரிய வைசிய சங்க துணை தலைவர், உஷா பட்டு மாளிகை உரிமையாளர் பெருமாள் தலைமை தாங்கி 'தினமலர் - பட்டம்' இதழை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
தலைமை ஆசிரியர் பவுல் ரட்சகநாதன் முன்னிலை வகித்தார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் சரளா வரவேற்றார்.
ஆசிரியர்கள் ஸ்டாலின், ஆரோக்கியசெல்வி செலின், ஜெயசுதா, உடற்கல்வி ஆசிரியர் ஜெரோம் உட்பட பலர் பங்கேற்றனர்.
