UPDATED : ஏப் 12, 2024 12:00 AM
ADDED : ஏப் 12, 2024 10:44 AM

கோவை:
கோவை, வீரியம்பாளையம் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில், புத்தக வாசிப்பில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி வரவேற்றார். ஆனந்த சைதன்யா அறக்கட்டளை' நிறுவனர் தில்லை செந்தில் பிரபு பரிசு வழங்கி பேசுகையில், மாணவ, மாணவியர் மத்தியில் வாசிப்பு பழக்கம் இன்னும் வளர வேண்டும்.
பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக பாடபுத்தகங்களை படிப்பதுடன், நாட்டு நடப்பினை அறிந்து கொள்ள புத்தகங்களை தேர்வு செய்து வாசிக்க வேண்டும். அதுமட்டுமின்றி முக்கியமாக செய்தித்தாள் வாசிக்க வேண்டும். செய்தித்தாள் வாசிப்பதன் வாயிலாக உலக நடப்பை நாம் விரிவாக அறிந்து கொள்ள இயலும் என்றார்.
புத்தக வாசிப்பில் சிறந்து விளங்கிய மாணவிகள் பிரியதர்ஷினிக்கு முதல் பரிசும், மதுமிதாவுக்கு இரண்டாம் பரிசும், இசக்கியம்மாளுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது. மேலும் 25 மாணவ, மாணவியருக்கு பாராட்டு சன்றிதழ் வழங்கப்பட்டது. தன்னார்வலர்கள் சுந்தரம் அன்பரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றேனர்.