UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 05:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
மாறிவரும் புவிசார் அரசியல் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற நிலைகள் இருந்தபோதிலும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - நவம்பர் காலகட்டத்தில், இந்தியாவின் ஆடைகள் ஏற்றுமதி 11.40 சதவீதம் அதிகரித்து, 82,740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்த வளர்ச்சி, இந்தியாவின் தயாரிப்புகளுக்கான உலகளாவிய தேவையை குறிப்பதாகவும், மத்திய, மாநில அரசுகளின் வலுவான ஆதரவு கொள்கைகளால், எதிர்காலத்தில் மேலும் நிறைய வணிகங்கள் இந்தியாவுக்கு மாறும் என எதிர்பார்ப்பதாகவும் கவுன்சில் தெரிவித்துள்ளது.