UPDATED : மே 31, 2024 12:00 AM
ADDED : மே 31, 2024 10:45 AM

கோவை:
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும், 27 உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நேற்று நடந்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள, 60 அரசு உதவிபெறும் பள்ளிகளில், 31 ஆசிரியர்கள் உபரியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உபரி ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்யும் கலந்தாய்வுப் பணி, ராஜவீதி துணிவணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்தது.
முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார். கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என மொத்தம், 31 பேர் பங்கேற்றனர்.
இவர்களில், 27 ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளைத் தேர்வு செய்தனர். இதையடுத்து, அவர்களுக்குப் பணியாணை அப்போதே வழங்கப்பட்டது.