மாணவர்களுடன் விவாதிக்க ஐ.ஐ.டி.,யில் புத்தாக்க அமர்வு
மாணவர்களுடன் விவாதிக்க ஐ.ஐ.டி.,யில் புத்தாக்க அமர்வு
UPDATED : ஆக 29, 2024 12:00 AM
ADDED : ஆக 29, 2024 11:43 AM
பாலக்காடு:
அறிவியல் கண்காட்சிகளுக்கு அப்பால், பல்வேறு தொழில்நுட்ப யோசனைகளை உருவாக்க மாணவர்களை ஊக்குவித்து ஆதரவளிப்பது, இளம் கண்டுபிடிப்பாளர்கள் திட்டம் போன்ற தளங்களுக்கு, அவர்களை கொண்டு சேர்க்க, உன்னத பாரத் அபியான் மற்றும் ஐ.ஐ.டி. பாலக்காடு இன்னோவேஷன் கவுன்சில் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக புத்தாக்க அமர்வு நடந்தது.
ஐ.ஐ.டி.யின் முதன்மை கண்டுபிடிப்பு அதிகாரி (இன்னோவேஷன் ஆபீசர்) ஜேக்கப் சாண்டபிள்ளையின் தலைமையில் நடந்த நிகழ்வில், இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் சமர்ப்பித்த யோசனைகள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை உட்படுத்தி விவாதித்தனர்.
டிரக் டிடெக்டர், தெரு விளக்குகளில் உள்ள தானியங்கி செயல்படும் அமைப்பு, ஜியோபென்சிங், ஆம்புலன்ஸ் பயணத்தை எளிதாக்க போக்குவரத்தை கட்டுப்படுத்த உதவும் எமர்ஜென்சி லைட் சிஸ்டம் போன்ற மாணவர்களால் தயாரிக்கப்பட்ட யோசனைகள் விவாதிக்கப்பட்டன.
பாலக்காடு ஐ.ஐ.டி.யில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துணை பேராசிரியர்கள் சரத்சசி, பிரசன்னா, இணைப் பேராசிரியர் கண்மணி, உன்னத பாரத் அபியான் நிறுவன ஒருங்கிணைப்பாளரும் துணை பேராசிரியருமான சஹேலி பத்ரா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அனுரஞ்சு, ஆராய்ச்சி மாணவர்கள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.