ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் பழுது; பள்ளி மாணவர்கள், பயணிகள் அவதி
ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் பழுது; பள்ளி மாணவர்கள், பயணிகள் அவதி
UPDATED : செப் 21, 2024 12:00 AM
ADDED : செப் 21, 2024 10:49 AM
பந்தலுார்:
பந்தலுார்- குந்தலாடி வழித்தடத்தில், ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்றதால், மாணவர்கள் மற்றும் பயணிகள் அவதி அடைந்தனர்.
பந்தலுாரில் இருந்து குந்தலாடி மற்றும் பாட்டவயல் வழித்தடத்தில் மாலை, 4:45 மற்றும் 5:30 மணிக்கு இரண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில், முதல் பஸ் பந்தலுார் அருகே கூவமூலா பகுதியில் இருந்தும்; மற்றொரு பஸ் கூடலுார் பகுதியில் இருந்தும் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பிற பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் பஸ் மேங்கோரேஞ்ச் என்ற இடத்தில் பழுதடைந்து நின்றது. மற்றொரு பஸ் நெல்லியாளம் என்ற இடத்தில் பழுதடைந்து நின்றது. இதனால், மாணவர்கள் மற்றும் பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
மாலை நேரத்தில் வனவிலங்குகள் அச்சத்துடன் பயணிகள் மற்றும் மாணவர்கள் நடந்து சென்ற நிலையில், அரசு போக்குவரத்து துறை மீது கடும் அதிர்ப்தி அடைந்தனர். எனவே, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இப்பகுதிகளில் புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.