நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் சர்வதேச நுண்ணுயிரியல் தின விழா
நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் சர்வதேச நுண்ணுயிரியல் தின விழா
UPDATED : செப் 21, 2024 12:00 AM
ADDED : செப் 21, 2024 10:47 AM
நாமக்கல்:
நாமக்கல், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், நுண்ணுயிரியல் துறை சார்பில் சர்வதேச நுண்ணுயிரியல் தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். மூத்த பேராசிரியர் எமிமாள் நவஜோதி வாழ்த்தி பேசினார். துறைத்தலைவர் முத்துமணி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவிகளுக்கான கவிதை, ரங்கோலி, முக ஓவியம், குறு நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவிற்கு, ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லுாரி, திருச்செங்கோடு விவேகானந்தா கல்லுாரி, செங்குந்தர் கல்லுாரி, கே.எஸ்.ஆர். கல்லுாரி, நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லுாரி, பி.ஜி.பி., கல்லுாரிகளில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.