UPDATED : ஜன 18, 2025 12:00 AM
ADDED : ஜன 18, 2025 11:34 AM
புதுச்சேரி:
விடுதியில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் பிரவீன்குமார் ஆகியோரின் அறிக்கை:
போதை ஆசாமிகள், சட்ட விரோதமாக புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் நுழைந்து, மாணவி ஒருவரிடம் தகாத செயலில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து மாணவி புகார் கொடுக்க விடாமல் மிரட்டப்பட்டுள்ளார்.
இப்பிரச்னையை பல்கலை நிர்வாகம் மூடி மறைக்காமல், போலீசார் மூலம் முழுமையாக விசாரிக்க வேண்டும்.
தற்போது கல்வி நிலையங்களில் கூட மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. பல கல்வி வளாகங்கள் இரவு நேரங்களில் போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறி வருகிறது. இதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கல்வி வளாக விடுதிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.