வேலை உறுதி திட்ட சுகாதாரப்பணியாளர் பள்ளிகளில் பயன்படுத்த கோரிக்கை
வேலை உறுதி திட்ட சுகாதாரப்பணியாளர் பள்ளிகளில் பயன்படுத்த கோரிக்கை
UPDATED : ஜன 17, 2025 12:00 AM
ADDED : ஜன 17, 2025 11:39 AM
உடுமலை:
அரசு பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலமாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு துவக்கம் முதல், மேல்நிலை வரை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாதந்தோறும் அவர்களுக்கான ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. பல மாதங்கள் தாமதமாகி தான் ஊதியம் வழங்கப்படுகின்றன. இதனால் சில பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் அடிக்கடி பணிகளை புறக்கணித்து செல்கின்றனர். மேலும், குறிப்பிட்ட பணிகளை மட்டுமே பார்த்துச்செல்கின்றனர். இதனால் பள்ளியின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் வாரம் ஒருமுறை வீதம் முழு துாய்மைப்பணிகளை மேற்கொள்வதற்கும், அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.