சிலம்ப பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
சிலம்ப பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
UPDATED : ஜன 17, 2025 12:00 AM
ADDED : ஜன 17, 2025 11:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையத்தில், ஸ்ரீகலை சிலம்ப கூடத்தின், 19ம் ஆண்டு சிலம்ப போட்டி, சான்றிதழ் வழங்கும் விழா, நேற்று நடந்தது. முதலில், சிலம்ப மாணவ, மாணவியர், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது தொடர்பாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து ஒற்றை தடி, இரட்டை தடி அடிமுறை, சுருள்வாள், மான்கொம்பு, கல்லப்புத்து, பட்டாக்கத்தி கேடயம், சோடு சண்டை உள்ளிட்ட பல்வேறு வகை தற்காப்பு விளையாட்டுகளில் ஈடுபட்டு, திறமைகளை வெளிப்படுத்தினர். தீ பந்தத்தில் சிலம்ப கலையை அற்புதமாக செய்தனர். முடிவில் சிலம்ப ஆசிரியர் வெங்கடேசன், மாணவர்களுக்கு சிலம்பச்செல்வன், மாணவிகளுக்கு சிலம்பச்செல்வி எனும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.