UPDATED : ஜூன் 03, 2026 08:51 PM
ADDED : ஜூன் 03, 2026 08:53 PM

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2026 - 28ஆம் ஆண்டிற்கான முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகையை அறிவித்துள்ளது.
தேர்வு செய்யப்படும் ஆய்வாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குத் மாதம்தோறும் ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தவிர, ஆய்வு தொடர்பான பிற செலவினங்களை மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் ரூ.18,000 வரை கூடுதல் நிதியும் அளிக்கப்படுகிறது.
தகுதி:
முழுநேர முனைவர் பட்ட ஆய்விற்காக பதிவு செய்திருக்க வேண்டும். இலக்கியம், மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், தொல்லியல், கல்வெட்டியல், இசையியல், நிகழ்த்துக்கலைகள், வழக்காற்றியல், வரலாறு, கணினித் தமிழ் போன்ற ஏதேனும் ஒரு துறையில் 55 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் முதுநிலைப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 23, 2026
விபரங்களுக்கு:
www.cict.in
