UPDATED : ஜூன் 03, 2026 08:50 PM
ADDED : ஜூன் 03, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் 2026-27ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
படிப்புகள்:
பி.வி.எஸ்சி.,&ஏ.எச்.,-கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு
பி.டெக்., - உணவு தொழில்நுட்பம்
பி.டெக்., - பால்வள தொழில்நுட்பம்
பி.டெக்., - கோழியின தொழில்நுட்பம்
இட ஒதுக்கீடு:
தமிழக மாணவர்கள், அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://adm.tanuvas.ac.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 17, 2026
விபரங்களுக்கு:
https://www.tanuvas.ac.in/
