sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

யு.ஜி.சி., வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம்; மற்ற மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

/

யு.ஜி.சி., வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம்; மற்ற மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

யு.ஜி.சி., வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம்; மற்ற மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

யு.ஜி.சி., வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம்; மற்ற மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்


UPDATED : ஜன 21, 2025 12:00 AM

ADDED : ஜன 21, 2025 10:04 AM

Google News

UPDATED : ஜன 21, 2025 12:00 AM ADDED : ஜன 21, 2025 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பல்கலை நிதிநல்கைக்குழு சமீபத்தில் வெளியிட்ட, வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது போல், பா.ஜ., ஆட்சி இல்லாத மாநில சட்டசபைகளில், தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, அம்மாநில முதல்வர்களுக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிப்பது தொடர்பாக, மாநில கவர்னருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை நிதிநல்கை குழு வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனம் குறித்த விதிகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதேபோன்ற தீர்மானத்தை, டில்லி, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு- காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலுங்கானா மாநில சட்டசபைகளிலும் நிறைவேற்ற வேண்டும் என, அம்மாநில முதல்வர்களுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கட்டுப்படுத்துகிறது
அதில் கூறியிருப்பதாவது:

பல்கலைகளில் துணை வேந்தர்கள் நியமனத்தில், மாநில அரசுகளின் பங்கை கட்டுப்படுத்தும் வகையிலும், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கை நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட, நிர்வாக நடைமுறைகளை கட்டுப்படுத்தும் வகையிலும், யு.ஜி.சி., வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பரிசீலியுங்கள்

இது, மாநில அரசுகளின் உரிமைகளை தெளிவாக மீறும் செயல். பல்கலைகளின் சுயாட்சியில், நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிகாரத்தை மையப்படுத்தி, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக, நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம். இந்தக் கோரிக்கையை பரிசீலித்து, மாநில சட்டசபைகளில், இதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

யு.ஜி.சி., வெளியிட்ட வரைவு நெறிமுறைகளில், பல விதிகள் மாநிலங்களின் கல்விமுறை, கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளது. எனவே, கல்வி அமைச்சகம் விவாதத்தில் உள்ள, வரைவு மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும்.

நாட்டில் உள்ள மாறுப்பட்ட உயர்கல்வி தேவைகளுடன், சிறப்பாக ஒத்துப்போகும் வகையில் வரைவு விதிகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பரிசீலித்து, சாதகமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us