தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல்

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல்

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல்


UPDATED : ஜூன் 24, 2026 08:30 PM

ADDED : ஜூன் 24, 2026 08:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2026 08:30 PM ADDED : ஜூன் 24, 2026 08:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளுக்கான திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

செண்டாக் ஒருங்கிணைப்பாளர் முத்துமீனா செய்திக்குறிப்பு:


இந்த 2026-27 கல்வி ஆண்டிற்கான நீட் அல்லாத இளங்கலை தொழில்முறை படிப்புகளான பி.வி.எஸ்.சி., (கால்நடை மருத்துவம்), பி.எஸ்.சி., விவசாயம் & தோட்டக்கலை, பி.பார்ம், பி.பி.டி, பி.எஸ்சி., துணை மருத்துவ படிப்புகள், பி.டெக்., பி.ஏ., எல்.எல்.பி., (5 ஆண்டுகள்) மற்றும் பிற சட்டப் படிப்புகள், பி.வி.ஓ.சி., உயிரியல் சார்ந்த துணை மருத்துவ டிப்ளமோ படிப்புகள், ஏ.என்.எம்., மற்றும் இளங்கலை கலை, அறிவியல் மற்றும் வணிக படிப்புகளுக்கான (பிஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ & பி.சி.ஏ) சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் நேற்று www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிலை, அந்தந்த விண்ணப்பதாரரின் டாஷ்போர்டில் கிடைக்கும். ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், வரும் 27ம் தேதி காலை 11:00 மணிக்கு முன், டாஷ்போர்டில் உள்நுழைந்து 'ஆட்சேபனைகள்' இணைப்பின் கீழ் சமர்ப்பிக்கலாம். மாணவர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்காக குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான பி.எஸ்சி., நர்சிங் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கையானது, பி.என்.இ.டி-2026 (புதுச்சேரி நர்சிங் நுழைவு தேர்வு) மதிப்பெண்ணின் அடிப்படையில் நடைபெறும். பி.எஸ்சி., நர்சிங் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தனி தரவரிசை பட்டியல், நர்சிங் நுழைவுத் தேர்வு பிறகு வெளியிடப்படும்.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாகி அன்னை தெரசா முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் வழங்கப்படும் பி.எஸ்சி., நர்சிங் சுயநிதி, வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் சேர்க்கையானது, நீட் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.

நர்சிங் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்ட பிறகு, தேர்வர்கள் தங்களின் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை சமர்ப்பிக்க போதிய அவகாசம் வழங்கப்படும்.

விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் www.centacpuducherry.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது தங்களின் உள்நுழைவு டாஷ்போர்டில் உள்ள குறைகள் விருப்பத்தின் மூலம் கேள்விகளைச் சமர்ப்பிக்கலாம். அல்லது உதவி எண்: 0413-2655570; 2655571ஐ தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us