தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறலாம்!

ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறலாம்!

ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறலாம்!


UPDATED : ஜூன் 24, 2026 08:29 PM

ADDED : ஜூன் 24, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2026 08:29 PM ADDED : ஜூன் 24, 2026 08:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பார்வை மாற்றுத்திறனாளியான அப்துல்லா அப்ரீத்துக்கு படிப்பது என்றால் அப்படி ஒரு வெறி. படிப்பின் மீதான அவரது தாகம், ஐ.ஏ.எஸ்.தேர்வில் முதல் தடவையிலேயே அவருக்கு வெற்றியை தந்துள்ளது.

உக்கடம் அல்-அமீன் காலனியை சேர்ந்த இவர், அகில இந்திய அளவில், 942-வது இடத்தையும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

பார்வை குறைபாடு, பல உறுப்புகளின் போதிய வளர்ச்சியின்மையால் கடுமையான உடல் குறைபாடுகள் உள்ளன. பிறர் உதவி இன்றி செயல்பட முடியாத இவர் சாதித்தது எப்படி?

அப்துல்லா அப்ரித் கூறியதாவது:


என்னுடைய வெற்றிக்கு பெற்றோர் முதல் காரணம். பள்ளி முதல், பட்டம் பெறும் வரை அப்பா தான் அழைத்துச் சென்று வருவார். அவர் தன் வாழ்வை எனக்காக தியாகம் செய்துள்ளார்.

அப்பாவுக்கு பதில் குடும்ப சுமையை அம்மா ஏற்றுக்கொண்டார். பள்ளி, கல்லுாரி நிர்வாகமும் உதவின. யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி பெற்றேன். கடின முயற்சியும் பிறரது உதவிகளும் வெற்றி பெற உதவின.

படிப்பில் பேராசை பலர் யு.பி.எஸ்.சி., தேர்வு என்றால் கடினம் என, பாதியில் விட்டு விடுகின்றனர். தேர்வு கஷ்டம்தான். ஆனால் முயற்சி உள்ளவர்களுக்கு கஷ்டம் கிடையாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதுபவர்களுக்கு ஆசை போதாது; பேராசை இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தேர்வுக்கு தயாரானது எப்படி?



“மெயின் தேர்வுக்கு சென்னையில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அங்கு என்னுடன் படித்த பலரும் உதவினர். பார்வை குறைபாடு இருந்ததால் பாடங்களை படித்து காட்டினர். இந்த தேர்வில் ஏற்கனவே வெற்றி பெற்ற பலருடன் ஐ.ஏ.எஸ்., ஐபி.எஸ்., அதிகாரிகளுடன் உரையாட, பயிற்சி மைய ஆசிரியர் இளஞ்செழியன் உதவினார். பெரும்பாலும் ஒலி வழியாகத்தான் கற்றேன். தினமும் எட்டு மணி நேரத்துக்கு மேல் படித்தேன்,” என்றார் அப்துல்லா அப்ரித்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us