ரோபோட்டிக் அடிப்படையில் அபாகஸ் வகுப்பு ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிமுகம்
ரோபோட்டிக் அடிப்படையில் அபாகஸ் வகுப்பு ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிமுகம்
UPDATED : நவ 15, 2026 01:19 PM
ADDED : நவ 15, 2026 01:20 PM
அரூர்:
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 'ஸ்மார்ட் பிரைன் அகாடமி' சார்பில் இந்தியாவின் முதல் ரோபோட்டிக் அடிப்படையிலான அபாகஸ் வகுப்பு அறிமுக விழா நடந்தது.
விழாவில் ஸ்மார்ட் பிரைன் அகாடமியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சரண்குமார், ரோபோட்டிக் தொழில்நுட்பத்தின் மூலம், அபாகஸ் கற்பிக்கும் புதிய கல்விமுறையை அறிமுகப்படுத்தினார். விழாவில் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் தமிழ்மணி கலந்து கொண்டார்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த தனியார் பள்ளிகளின் தாளாளர்கள், நிர்வாகிகள் மற்றும் முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய கற்பித்தல் முறையின் மூலம் மாணவர்களின் கவனிக்கும் திறன், சிந்திக்கும் திறன், கணிதத்திறன் மற்றும் கற்றல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், ரோபோவுடன் நேரடியாக உரையாடி கற்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வியையும், நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கும் இந்த முயற்சி, எதிர்கால கல்வியில், புதிய மைல் கற்களாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.
