தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய கல்விப் பார்வையில் பிர்லா ஓபன் மைண்ட்ஸ் பள்ளி

புதிய கல்விப் பார்வையில் பிர்லா ஓபன் மைண்ட்ஸ் பள்ளி

புதிய கல்விப் பார்வையில் பிர்லா ஓபன் மைண்ட்ஸ் பள்ளி


UPDATED : நவ 15, 2026 01:18 PM

ADDED : நவ 15, 2026 01:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 01:18 PM ADDED : நவ 15, 2026 01:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பேரூர் செட்டிபாளையத்தில் உருவாகி வரும் பிர்லா ஓபன் மைண்ட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, பாடப்புத்தகக் கல்வியுடன் வாழ்க்கைத் திறன்கள், விளையாட்டு, ஒழுக்கம், ஆன்மீகம், தொழில்முனைவு சிந்தனையை ஒருங்கிணைக்கும் புதிய கல்விப் பார்வையுடன் செயல்பட உள்ளது.

பள்ளியின் தலைவர் சுரபி கார்த்திக் தலைமையில், உலகத்தரக் கல்வியை நியாயமான கட்டணத்தில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன், மனப்பாடக் கல்விக்கு பதிலாக கேள்வி கேட்டு, ஆராய்ந்து, செய்முறை மூலம் கற்கும் முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

மாணவர்களுக்கு பரிவு, சமூகப் பொறுப்பு, பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதம், தூய்மை, போக்குவரத்து ஒழுங்கு, முதியவர்களுக்கு மரியாதை உள்ளிட்ட சமூகத் திறன்களும் கற்றுத்தரப்படுகின்றன.

மழலையர் வகுப்புகளுக்கென தனிக் கட்டடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வளாகத்தில் செயற்கை விளையாட்டு மைதானங்கள், சர்வதேச தர விளையாட்டு ஓடுதளம், ஜூடோ, குங்பூ, கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளுக்கான உள்ளரங்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு நிதி அறிவு, சேமிப்பு, திட்டமிட்ட செலவு, தொழில்முனைவு சிந்தனை, புத்தாக்கம், சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவை கற்றுத்தரப்பட உள்ளன. 'துபாய் பியூச்சர் லேப்' உடனான கூட்டு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

3 ஆயிரம் மாணவர்கள் பயிலும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இப்பள்ளியில், 2027 - 28 கல்வியாண்டுக்கான நர்சரி முதல் 7ம் வகுப்பு வரையிலான முதற்கட்ட மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us