தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.ஜி.பி., கல்லுாரி மாணவியர் கிராமப்புற அனுபவ பயிற்சி

பி.ஜி.பி., கல்லுாரி மாணவியர் கிராமப்புற அனுபவ பயிற்சி

பி.ஜி.பி., கல்லுாரி மாணவியர் கிராமப்புற அனுபவ பயிற்சி


UPDATED : ஜன 26, 2026 12:01 PM

ADDED : ஜன 26, 2026 12:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2026 12:01 PM ADDED : ஜன 26, 2026 12:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மோகனுார்: பி.ஜி.பி., வேளாண்மை அறிவியல் கல்லுாரி மாணவியர், கிராமப்புற வேளாண்மை அறிவியல் பயிற்சியின் ஒரு பகுதியாக, மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையை பார்வையிட்டனர். கரும்பு மேம்பாட்டு அலுவலர் காமராஜ், மாணவியருக்கு விளக்கமளித்தார்.

அதில், ஆவியில் அமிழ்த்தல் அலகு அல்லது அமிழ்த்தி பிரிக்கும் அலகு என்றழைக்கப்படும், 'டிஸ்டிலேஷன்' பிரிவு மற்றும் சர்க்கரை ஆலை உற்பத்தி கழிவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இயற்கை உரம், கம்போஸ்ட் உற்பத்தி அலகை பற்றி விரிவாக கற்றுணர்ந்தனர்.

தொடர்ந்து, ஆர்.ஓ., பிரிவில் மொலாசஸ் மற்றும் கழிவுநீர் ஆகியவை வடிகட்டி துாய நீராக மாற்றப்படும் தொழில்நுட்ப செயல்முறைகளை பார்வையிட்டனர்.

மேலும், நீர் குறைபாட்டை தடுக்கவும், தொழிற்சாலையின் நீர் மறுசுழற்சி திறனை உயர்த்தவும், இந்த முறைகள் எவ்வாறு முக்கிய பங்கை வகிக்கின்றன என்பதையும் தெரிந்து கொண்டனர்.

தொழிற்சாலையின் புழக்க கழிவுகளை பயனுள்ள தயாரிப்பாக மாற்றும் தொழில்நுட்பம், மண்ணின் வளத்தன்மையை மேம்படுத்தும் இயற்கை உரம் மற்றும் கம்போஸ்ட் பயன், நீர் பாதுகாப்பு மற்றும் வளங்களின் திறமையான மேலாண்மை ஆகியவை தொழிற்சாலை தரும் முக்கிய கற்றல்களாக மாணவர்களுக்கு விளங்கியது.

இந்த தொழில்துறை அனுபவம், வேளாண் உற்பத்தி மற்றும் தொழிற்சாலை மேலாண்மை இணைந்து நிலைத்த வளர்ச்சியை நோக்கி எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மாணவியர் அறிந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us