சாய்ராம் கோப்பை டேபிள் டென்னிஸ்: எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடம்
சாய்ராம் கோப்பை டேபிள் டென்னிஸ்: எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடம்
UPDATED : பிப் 09, 2026 10:37 PM
ADDED : பிப் 09, 2026 10:38 PM
சென்னை:
கல்லுாரிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், இருபாலரிலும் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிகள் முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றின.
சாய்ராம் பொறியியல் கல்லுாரி சார்பில், சீதாராமன் - லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான டேபிள் டென்னிஸ் போட்டி, மேற்கு தாம்பரத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில், கடந்த இரண்டு நாட்கள் நடந்தது. போட்டியில், ஆண்களில் 16 அணிகளும், பெண்களில் 14 அணிகளும் மோதின.
ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில், எஸ்.எஸ்.என்., கல்லுாரியுடன் மோதிய எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 3 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, முதலிடத்தை தட்டிச் சென்றது.
இந்தப் பிரிவில், சாய்ராம் கல்லுாரி மூன்றாம் இடத்தையும், ராஜலட்சுமி கல்லுாரி நான்காம் இடத்தையும் கைப்பற்றின.
பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் சாய்ராம் கல்லுாரி அணிகள் மோதின. இதில், 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது.
இந்தப் பிரிவில், எஸ்.எஸ்.என்., கல்லுாரி மூன்றாம் இடத்தையும், செயின்ட் ஜோசப் கல்லுாரி நான்காம் இடத்தையும் பெற்றன.

