UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM
ADDED : ஜூன் 14, 2025 11:49 PM
தங்கவயல்:
தங்கவயலில் உள்ள தனியார் பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உட்பட மாணவர்களுக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்வதற்கு தங்கவயல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சில தனியார் பள்ளிகளை நோட்டு புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்விக்கு தேவையான பொருட்களை விற்கும் வியாபார தலமாக மாற்றி வருகின்றனர். சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்து, மாணவர்களின் பெற்றோருக்கு அதிக சிரமத்தை பள்ளி நிர்வாகங்கள் கொடுத்து வருகின்றன.
தங்கவயலில் முழுநிலவு விழா
இதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என, தங்கவயல் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் எஸ்.ராமு என்பவர் வழக்கு கொடுத்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வினோத் குமார், அரசின் உத்தரவில் பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டாயப்படுத்தி நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உட்பட கல்விக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்ய அனுமதி இல்லை. எனவே அரசு உத்தரவுப்படி இவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது என நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

