UPDATED : செப் 13, 2026 01:14 PM
ADDED : செப் 13, 2026 01:15 PM
ஈரோடு:
வெளிநாடு சென்று உயர் கல்வி படிக்கும் முஸ்லிம் மாணவ, மாணவியர், 10 பேருக்கு அதிகபட்சம் தலா, 36 லட்சம் ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை பட்டப்படிப்புக்கு, 'குவாக்கரெல்ஸி சைமண்ட்ஸ்' தர வரிசையில் முதல், 250 இடங்களுக்குள் உள்ள பல்கலை கழகங்கள், நிறுவனங்களிடம் இருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற வேண்டும்.
பட்டப்படிப்பில், 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். www.bcmbcw.tn.gov.in மற்றும் welfschemes-_minorities.htm என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 5' என்ற முகவரிக்கு அக்., 15க்குள் அனுப்ப வேண்டும்.
