மத்திய கல்வி நிறுவனங்களில் படிப்போர் கல்வி உதவித்தொகை பெற யோசனை
மத்திய கல்வி நிறுவனங்களில் படிப்போர் கல்வி உதவித்தொகை பெற யோசனை
UPDATED : செப் 13, 2026 01:15 PM
ADDED : செப் 13, 2026 01:16 PM
ஈரோடு:
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - மத்திய பல்கலை கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பி.சி., - எம்.பி.சி., - டீ.என்.சி., பிரிவு மாணவ, மாணவியர் நடப்பு கல்வி ஆண்டுக்கான புதிய மற்றும் புதுப்பித்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
குடும்ப ஆண்டு வருவாய், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ளோர், கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், இதர கட்டாய கட்டணம் அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெறலாம்.
'பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம் - சென்னை, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம் - சென்னை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், இணைய தளம், www.bcm.tn.gov.in' மூலம் விண்ணப்பிக்கலாம்.
மத்திய, மாநில அரசின் இதர கல்வி உதவி திட்டங்களில் பயன் பெறும் மாணவர்கள் இத்திட்டத்துக்கு தகுதியற்றவர்கள். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கல்வி நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். கல்வி நிறுவனம், போனபிட் சர்டிபிகேட்டுடன் பரிந்துரை செய்து, உரிய நலத்துறைக்கு அனுப்பும். ரினிவல் விண்ணப்பம் வரும் அக்.,31 க்குள்ளும், புதிய விண்ணப்பம் நவ.,30க்குள் அனுப்ப வேண்டும். 'ஈவன் செமஸ்டர்' கட்டண ரசீது 2027 ஜன., 15க்குள் அனுப்ப வேண்டும்.
